செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:23 IST)

சமூக வலைதல பதிவுகளை டெலிட் செய்த பாகுபலி நடிகர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் பாகுபலி பட ஹீரோவுமான ராணா தனது சமூக வலைதள அத்தனை பதிவுகளையும் டெலிட் செய்துள்ளார்.
 
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ராணா டகுபதி. இவர் நடிகர் திரைப்பட இயக்குனராக வலம் வருகிறார். 
 
இவர்   லீடர், கிருஷ்ணம் வந்தே ஜத்குரும் ,  அஜித்துடன் இணைந்து ஆரம்பம், ருத்ரமாதேவி, பாகுபலி, பெங்களூர் நாட்கள், என்னை   நோக்கிப் பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் நடிப்பில் கடைசியில் வெளியான படம் விராட பர்வம். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
 
இந்த நிலையில், இவருக்கு கடந்த 2020 ஆண்டு திருமணம் நடந்தது.  இந்தத் திருமணப் புகைப்படங்கள் உள்ளிட்ட பல பதிவுகளை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த  நிலையில், அனைத்துப் பதிவுகளையும் ராணா டெலிட் செய்துள்ளார்.
 
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.