செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (12:38 IST)

இப்படி செஞ்சாதான் ரசிகர்களை இழுக்க முடியும்: தமன்னா

தமிழ், தெலுங்கில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் தமன்னா. பாகுபலி படத்துக்கு பிறகு சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். அதோடு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்கிறார். இது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இதற்கு பதில் அளித்து தமன்னா கூறியதாவத, நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 10 வருஷம் ஆச்சு. இத்தனை வருடம் சினிமாவில் முன்னணி நடிகையாக  இருக்கும் நீங்கள் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது ஏன்? அப்படி ஆடாதீங்கன்னு சிலர் எங்கிட்ட சொல்றாங்க. அவர்களுக்கெல்லாம் நான்  சொல்ல விரும்புவது ஒன்று தான், 'நடனம் என்பது எனது சினிமா வாழ்க்கையில் ரொம்ப முக்கியான ஒன்று'. 
 
நான் சினிமாவில் இந்த அளவுக்கு நான் வளர்ந்ததுக்கு நடனத்தோடு சேர்ந்த நடிப்புதான் காரணம். பெரிய கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பது இல்லை. குறைவான காட்சிகளே அவர்களுக்கு கொடுப்பார்கள். அதில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது  கஷ்டம். அந்த நடிப்பை மட்டும் வைத்து ரசிகர்களை நமது பக்கம் இழுக்க முடியாது. 
 
எனவேதான் நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். நடனம் மூலமாக ரசிகர்களை எனது பக்கம் இழுத்தேன். ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தாலும் மறுப்பது இல்லை. எனது உடல் எடை கூடாதது குறித்தும் பேசுகிறார்கள். நான் பிடித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். ஆனாலும்  அளவோடு சாப்பிடுகிறேன்.