1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:16 IST)

"என்ன ஆனாலும் உன் கூடவே நிப்பேண்டா" வைரல் வீடியோ - தர்ஷனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்தே தர்ஷனின் கேரக்டர் பலருக்கும் பிடித்துவிட்டது. யார் தவறு செய்தாலும் தட்டிக்கேட்பது. பெண்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்வது நண்பனுக்காக துணை நிற்பது உள்ளிட்ட எல்லா விஷயத்திலும் தர்ஷன் மக்கள் மனதை வென்றுவிட்டார். 


 
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு ஆண் சிங்கம் தர்ஷன் என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றுள்ளார்.  எனவே நிச்சயம் இந்த சீசன் டைட்டில் கார்டை தர்ஷன் வெல்வார் என்ற பரவலாக கூறி எதிர்பார்த்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது தர்ஷனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்,  அபிராமி - முகனுக்கும் இடையில் நடந்த பிரச்சனையில் முகனை காரணம் காட்டும் ஹவுஸ்மேட்ஸ்களை எதிர்த்து முகனுக்கு ஆதரவாக "என்ன நடந்தாலும் நான் உனக்காக நிப்பேன்டா" என்று தர்ஷன் குரல் கொடுத்துள்ளார்.
 
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு சூப்பர் வைரலாகி வருகிறது.