திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (23:39 IST)

ஆம்பளைங்க மட்டுந்தான் அடல்ட்ஸா? அஞ்சலியின் அதிரடி கேள்வி

'தங்க மீன்கள்' புகழ் ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் சமூக வலைத்தளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



 
 
இந்த நிலையில் நேற்று,  'ஆண் சரக்கடித்தால் 'யூ' சர்டிபிகேட் தரும் சென்சார் பெண் சரக்கடித்தால் மட்டும் 'ஏ' சர்டிபிகேட் தருவதாக கூடிய வாசகங்களுடன் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
 
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் புதிய போஸ்டரில் 'ஆம்பளைங்க மட்டுந்தான் அடல்ட்ஸா? என்று அஞ்சலி கேள்வி கேட்பதாக கூடிய வாசகங்களுடன் ஒரு போஸ்டர் வெளியாகி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. அடுத்து என்னென்ன புரட்சி(!)கரமான கருத்துக்களுடன் கூடிய போஸ்டர்கள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஆண்ட்ரியா, வசந்த், அழகம்பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.