வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (14:32 IST)

விந்து தானம் பற்றிய விழிப்புணர்வு படம் - ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராளப் பிரபு !

விந்து தானம் பற்றிய கதை களம் கொண்ட புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக வரும் வலம்வரும் ஆயுஸ்மான் குர்ரானா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விக்கி டோனர். விந்து தான விழிப்புணர்வு பற்றிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு விருதுகளையும் வாரி குவித்தது.

இதையடுத்து இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யும் ஆர்வம் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் அதிகரித்தது. இதையடுத்து இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார்,. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. விந்து தானம் பற்றி இந்த படத்தின் தலைப்பாக ரசிகர்களை கவரும் விதமாக தாராள பிரபு என்ற பெயரை வைத்துள்ளனர்.