வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (16:51 IST)

நடிகர் ராகவா லாரன்ஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி !

தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெ என முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆணை பிறப்பித்தார். இதற்கு நடிகை ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சாலையில் பாதுக்காப்புப் பணிகளில் இருந்து பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியைப் பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது, இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.

நானும் வருந்திருக்கிறேன். அந்தவகையில் இந்த ஆணையைக் கொண்டு மன நிம்மதி அடைகிறேன் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.