வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (16:45 IST)

ரஜினி அமெரிக்காவுக்குள் நுழைய முடியாதாம்… ஏன் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் இந்தியர்கள் அமெரிக்காவின் உள்ளே வருவதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றால் அந்த பயணம் தாமதமாகிக் கொண்டு வந்தது. இந்நிலையில் இப்போது ஒன்றிய அரசின் அனுமதியோடு அவர் தனி விமானத்தில் தனது குடும்பத்தினருடன் விரைவில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினி கொரோனா தடுப்பூசியாக கோவாக்சின் செலுத்திக்கொண்டுள்ளார். இந்த தடுப்பூசியை அமெரிக்கா கொரோனா தடுப்பூசியாக கருதவில்லை என அறிவித்துள்ளது. இதனால் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினி அமெரிக்காவுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.