திமுக அரசின் செயலைப் பாராட்டிய…பிரபல இயக்குநர்
தமிழக அரசின் நடவடிக்கைகள் தெம்பை அளித்துள்ளது என பிரபல இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது. எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இத்தொற்றைக் குறைக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலா தமிழ அரசு மே 17 ( இன்று முதல்) ஒவ்வொரு மாவட்டம் விட்டு செல்லும் போது இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரொனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைகள் தெம்பை அளித்துள்ளது என பிரபல இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தங்கர் பச்சான் தனது அறிக்கையில், கொரோனா தொற்றால் மருத்துவமனைகள் திணறிக்கொண்டுள்ளன. இரவு பகலாக மணிக்கணக்கில் காத்திருந்து உடல்கள் எரியூட்டப்படுகின்றன. தடுப்பூசிக்காக பயன்படுத்துகிற ரெம்டெசிவி மருத்து நோயைக் குணப்படுத்தாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக நான் அனுபவித்துவரும் வேதனைதான் என்னை எழுத வைத்துள்ளது. என் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே ஒவ்வொருநாளும் மக்கள் அச்சத்துடனும் வேதனையுடனும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய திமுக அரசின் நடவடிக்கைகளும் செயல்திட்டங்களும் தெம்பை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.