வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (11:37 IST)

ரஜினியும், கமலும் எனக்கு ஜூனியர்: விஜய்காந்த்!

கடந்த 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தேமுதிக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. துவக்கம் முதல் நல்ல நிலையில் இருந்துவந்தது, பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்து மேலும் முன்னேறியது. 
 
ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின் சரிவை சந்திக்க துவங்கியது. இதற்கு முக்கிய காரணம் விஜய்காந்தின் தெளிவற்ற பேச்சு என கருதப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜக, கை மட்டும் இல்லை கால் கூட ஊன்ற முடியாது.
 
மேலும் நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சினிமாவில்தான் எனக்கு சீனியர்கள் என்றும் அரசியலில் நான்தான் அவர்களுக்கு சீனியர் அவர்கள் எனக்கு ஜூனியர்தான் என்று கூறினார்.