வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (10:31 IST)

ரஜினியைவிட அதிகம் சம்பாதிக்கும் ரஜினி வில்லன்

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார் அக்ஷய் குமார். இவரது ஆண்டு வருமானம் ரஜினியைவிட பல மடங்கு அதிகம் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

 

 
 
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள, அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் பட்டியலில் 31.5 மில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் அக்ஷய் குமார் இருக்கிறார். இந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான ஏர்லிப்ட், ஹவுஸ்ஃபுல் 3, ரஸ்டம் மூன்றும் ஹிட். தற்போது 2.,0 ஜாலி எல்எல்பி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
 
ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ள அக்ஷய்யின் ஆண்டு வருமானம் நமது ரூபாய் மதிப்பில் சுமார் 207 கோடிகள். ரஜினியின் ஆண்டு வருமானத்தைவிட பல மடங்கு அதிகம். இந்தப் பட்டியலில் ஷாருக்கான், சல்மான், அமிதாப் பச்சன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.