வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (17:25 IST)

அஜித் அழைப்பிற்காக காத்திருக்கும் தம்பி ராமையா

விசுவாசம் படத்தில் நடிக்க அஜித் நிச்சயம் தன்னைக் கூப்பிடுவார் எனக் காத்திருக்கிறார் தம்பி ராமையா.

 
அஜித்–சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகிவரும் படம் விசுவாசம். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் தொடங்கவில்லை.
 
விசுவாசம் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், தனக்கு எப்படியும் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார் தம்பி ராமையா. காரணம், வீரம், வேதாளம் என அஜித்தின் முந்தைய படங்களில் தம்பி ராமையா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.