1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cm
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:47 IST)

ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அஜித்?

ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை அஜித் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் மூலம் அஜித் - சிவா - வெற்றி கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் அஜித் ஒரு பாடலைப் பாட இருக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. ஆனால், அது உண்மையில்லை எனப் பின்னர் தெரியவந்தது.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் எல்லோருமே தங்கள் படங்களிலும், பிற படங்களிலும் பாடல்கள் பாடியிருக்கின்றனர். எனவே, அஜித்தும் ஒரு பாடலாவது பாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அஜித்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.