செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (22:37 IST)

நான் ஏன் ஓவியாவை பற்றி பேச வேண்டும்? கவிஞர் தாமரை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார் ஓவியாவை பற்றி பேசாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாது. பொதுமக்கள், பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலகினர்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் டுவிட்டரில் ஓவியாவுக்கு கவிஞர் தாமரை ஆதரவு கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து கருத்து கூறிய தாமரை, 'எனக்கு டுவிட்டரில் அக்கவுண்டே இல்லை. நான் ஃபேஸ்புக்கில் மட்டுமே இருக்கின்றேன். என் பெயரில் யாரோ போலி அக்கவுண்ட் ஆரம்பித்து ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு நான் ஏன் ஓவியாவை பற்றி பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இருப்பினும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலாரா பார்த்து வருவதாகவும், ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு தான் அடிமையாகவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.,