தளபதி 61' படம் வேற லெவல்: இதை ஒரு விஜய் ரசிகனால் சொல்கிறேன்: அட்லி
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சினிமா இணையதளம் ஒன்றின் விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் விஜய், சமந்தா, அட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறந்த நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது சமந்தாவுக்கும்,கிடைத்தது.
இந்த நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி, 'தளபதி 61 திரைப்படம் இளையதளபதியின் வேற லெவல் படம். இதை நான் ஒரு இயக்குனராக கூறவில்லை, விஜய் ரசிகர்களில் ஒருவனாக கூறுகிறேன் என்று கூறினார்.