செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:16 IST)

விஜய் 66 பட கதாநாயகி யார்? மூன்று பேருக்கு இடையே போட்டி!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படம் அடுத்த ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்குள்ளாகவே அப்டெட்டை வெளியிட்டதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளதாம். படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதால் அதற்கான பைனான்ஸை ஏற்பாடு செய்யவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்நிலையில் இந்த படம் மற்ற விஜய் படங்களை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் வழக்கமாக விஜய் படங்களில் வரும் மாஸ் சீன்கள் எல்லாம் கம்மியாகதான் இருக்குமாம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தே இந்த படம் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் கியாரா அத்வானி ஆகிய மூன்று பேரில் ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.