திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (23:11 IST)

தளபதி 64 படப்பிடிப்பில் நடந்த தவறுக்கு பிராயசித்தம் செய்ய முன்வரும் விஜய்

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்ற நிலையில் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் விஜய்யுடன் ஒருசில நிமிடங்கள் பேச மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் ஆனால் விஜய் அவர்களை ஏமாற்றி விட்டுச் சென்று விட்டதாகவும் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தனது ஆதங்கத்தை ஒரு நீண்ட அறிக்கை மூலம் வெளியிட்டிருந்தார்
 
இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட விஜய் மிகுந்த வருத்தப்பட்டதாகவும், தற்போது கர்நாடக மாநிலத்தில் தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இருக்கும் அவர், சென்னை திரும்பியதும் மீண்டும் அதே பள்ளிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அந்த பள்ளி மாணவர்களிடம் பொழுதை கழிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தன்னுடைய படக்குழுவினர் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக தானே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விஜய்யின் இந்த முடிவுக்கு அனைத்து தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது