செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (19:20 IST)

கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வந்தனர் என்பதும் இந்த படத்தை விஜய் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே 
 
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏப்ரல் 23ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த படம் நல்ல வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது