திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (06:08 IST)

ரஜினி, அஜித், விஜய்: மூவரையும் இணைக்கும் சன்பிக்சர்ஸ்

ரஜினி, அஜித், விஜய்: மூவரையும் இணைக்கும் சன்பிக்சர்ஸ்
அஜித் நடித்துவரும் வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதத்துடன் முடிவடைந்துவிடும் என்றும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டாலும் அதெல்லாம் உண்மையில்லை என்றும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் அஜித் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அஜித்தின் அடுத்தப் படத்தையும் போனிகபூர் தயாரிப்பாக இருந்ததாகவும் ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ‘தல 61’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தை தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 65’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ’தல 61’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் ஒரே நேரத்தில் ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூன்று மாஸ் நடிகர்களின் படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது