தல 58' படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார்?
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகி திரையுலகில் கலக்கியது மட்டுமின்றி 50வது நாள் என்ற மைல்கல்லையும் எட்டியது. இந்த நிலையில் 'அஜித் 58' படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார்? என்பது குறித்த கேள்விகள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டிருந்தது
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா இயக்கவுள்ளதாகவும், 'வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து நான்காவது முறையாக அஜித்துடன் சிவா இணையவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இருப்பினும் இந்த படம் 'விவேகம்' அளவுக்கு பெரிய பட்ஜெட் படமாக இருக்காது என்றும் இதுவொரு கிராமத்து மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது