வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2017 (21:45 IST)

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்?

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.



 


ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் முதல் வாரமே வெளிவரும் என்றும் அனேகமாக ஜூலை 7ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா மற்றும் நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தும் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.