1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 3 மே 2017 (10:38 IST)

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் எங்கே? - சூர்யா ரசிகர்கள் கேள்வி!

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். தவிர, ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பிராமையா, மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது.

 
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூலை மாதம் இப்படம் திரைக்கு வருகிறது. பெரும்பாலும் பிரபலங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நடந்து கொண்டிருக்கும்போதே பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இந்த படம்  இறுதிகட்டத்தை நெருங்கிய பிறகும் பர்ஸ்ட் லுக் இன்னும் வெளியாகவில்லை. 
 
இந்நிலையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் என்ன ஆனது என்று விக்னேஷ் சிவனிடம் சூர்யா ரசிகர்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
இதற்லு விக்னேஷ் சிவன் ட்விட்டரில் எனக்கு ஃபர்ஸ்ட் லுக் டிசைன் பிடிக்கவில்லை அதனால் வேறு ஒன்றை தேர்வு  செய்துள்ளேன். கொஞ்சம் டைம் கொடுங்க. எனக்கு ரொம்ப பிரஷர் கொடுக்காதீங்க ப்ளீஸ் என்று தெரிவித்துள்ளார்.