1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 30 ஜூன் 2016 (19:31 IST)

விபத்தில் சிக்கிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மயிரிழையில் உயிர் தப்பினார்

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பாலகிருஷ்ணா கார் விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பினார்.


 

 
தெலுங்கு திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாரும், எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா நேற்று அவருடைய சட்டமன்றத் தொகுதியான ஹிந்துபூர் சென்றுவிட்டு பெங்களூர் விமான நிலையத்துக்கும் திரும்பிய போது பாகபல்லி என்ற இடத்தில் கார் விபத்துள்ளானது.
 
சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கார் விபத்து ஏற்பட்டு, முன்பக்க டயரும் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணாவும் அவருடன் காரில் இருந்தவர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
 
இந்த விபத்து செய்தி தெலுங்கு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டபோது பாலகிருஷ்ணா அந்தக் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.