புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (16:52 IST)

மேலும் ஒரு தெலுங்கு நடிகருக்கு கொரோனா – அதிர்ச்சி அளிக்கும் செய்தி!

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர்தான் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் தேஜாவுக்குக் கொரோனா உறுதியானதாக அறிவித்தார். அதுவே தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் இப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மற்றொரு இளம் நடிகரான வருண் தேஜுக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ளார் அவர். இது சம்மந்தமாக டிவிட்டரில் ‘எனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்டன. அதனால் சோதனை செய்துகொண்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இப்போது நான் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் மீண்டு வருவேன். உங்கள் அன்புக்கு நன்றி.’ எனக் கூறியுள்ளார்.