1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:47 IST)

கல்வி பிரச்சனையை கையில் எடுக்கும் ஸ்பைடர் நாயகன்!!

நடிகர் மகேஷ் பாபு டோலிவுட்டில் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஸ்பைடர் படம் வெளியானது.

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் மாகே‌ஷ் பாபுவிற்கு முதல் நேரடி தமிழ் படமாகும். ஆனால், இந்த் அபடம் எதிர்பார்ந்த அளவிற்கு நல்ல வெற்றியை பெறவில்லை.
 
இந்நிலையில், தனது அடுத்த படதடஹி வெற்றிபடமாக்க முழு உழைப்பையும் போட்டு வருகிறாராம் மகேஷ் பாபு. தெலுங்கில் அவர் அடுத்து பாரத் அன்னி நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த படத்தில் கல்வி சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கதையை உருவாக்கி உள்ளனர். படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
 
படப்பிடிப்பு தளத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் காட்சிகள் படக்குழுவை பிரமிக்க வைத்துள்ளதாம். வசன உச்சரிப்பில் அசத்தி வருகிறாராம் மகேஷ்பாபு.
 
இந்த படம் வெளியாகும் மகேஷ்பாபுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பொருத்திருந்து பார்ப்போம்....