1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (22:00 IST)

ஆர்யாவின் ‘டெடி’ குறித்த புதிய செய்தி!

ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு புதிய பாடலை இசையமைப்பாளர் இமான் அவர்கள் கம்போ செய்துள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது
 
இதுகுறித்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் தனது டுவிட்டரில் கூறியபோது ‘இமான் அவர்கள் கம்போஸ் செய்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலை மதன் கார்க்கி இயற்றியுள்ளார். இந்த பாடலின் ஒலிப்பதிவின் போது கிடைத்த அனுபவத்தை சொல்ல வார்த்தைகள் போதாது என்று கூறியுள்ளார். சித்ஸ்ரீராம் அவ்வளவு அருமையாக இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை சிங்கிள் பாடலாக விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளோம். இதுகுறித்து தேதி விரைவில் அறிவிப்பு வரும் என்று அவர் கூறியுள்ளார்
 
ஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவிருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன்களான டீசர், டிரைலர், இசை வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.