திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (20:42 IST)

இனி இந்தி படங்களை தமிழ்நாட்டிலேயே சென்சார் செய்யலாம்: விஷாலால் ஏற்பட்ட மாற்றம்..!

இதுவரை தமிழ் படங்களின் ஹிந்தி டப்பிங் திரைப்படங்களை மும்பையில் தான் சென்சார் செய்யப்பட்டு வந்த நிலையில் இனி தமிழ்நாட்டில் சென்சார் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து சென்சார் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்  தமிழ் உள்பட பிற மொழி திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகையில் அதனை தமிழ்நாட்டிலேயே சென்சார் செய்து கொள்ளலாம் என சென்சார் அறிவித்துள்ளது.

விஷாலால் இந்த மாற்றம் ஏற்பட்டதை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Edited by siva