இன்று நான்கு படங்கள்

Velaiyilla Pattathari Movie Stills
Geetha priya| Last Modified வெள்ளி, 18 ஜூலை 2014 (10:47 IST)
இன்று 18 -ம் தேதி வெள்ளிக்கிழமை நான்கு தமிழ்ப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. 
 
தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை, இருக்கு ஆனா இல்லை மற்றும் தலைகீழ். எண்ணிக்கை நான்காக இருந்தாலும் எதிர்பார்ப்பு வேலையில்லா பட்டதாரிக்கும், சதுரங்க வேட்டைக்கும்தான். 
தனுஷின் கடந்த இரு படங்கள் தோல்வியடைந்தாலும் வேலையில்லா பட்டதாரியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சமீபத்தில் வெளியான தனுஷ் படங்களில் இதற்குதான் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல்நாளான இன்று பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
 
சதுரங்க வேட்டைக்கும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திருப்பதி பிரதர்ஸின் விளம்பரங்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லரும் சதுரங்க வேட்டைக்கு நல்ல அறிமுகத்தை தந்துள்ளது.
இந்தியைப் பொறுத்தவரை இரு படங்கள் வெளியாகியுள்ளன. ஒன்று தமிழ் பீட்சாவின் இந்தி ரீமேக். இதன் பெயரும் பீட்சாதான். 3டி யில் தயாராகியிருக்கும் இப்படத்தை இந்திப்படவுலகு அதிகம் எதிர்பார்க்கிறது. இன்னொன்று ஹேட் ஸ்டோரி 2. செக்ஸ், வன்முறை என்று யாருக்கும் பிடித்தமான ஏரியா. சன்னி லியோன் வேறு இருக்கிறார். என்றாலும் சுர்வீன் சாவ்லாவின் கட்டற்ற கவர்ச்சிதான் படத்தின் கச்சாப் பொருள்.
 
இந்தியின் இரு படங்களும் தயாரித்தவர்களுக்கு லாபம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழிலும் அப்படி நடித்தால் திரைத்துறைக்கு பூஸ்ட் கிடைத்தது போலிருக்கும்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :