1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (07:46 IST)

என்னுடைய சினிமா பணிக்குக் கிடைத்த அங்கிகாரம்… காவாலா ஹிட்டால் தமன்னா மகிழ்ச்சி!

சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் ரிலீஸானது. இந்த பாடலில் தமன்னாவின் டான்ஸ் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.

இதையடுத்து பலரும் அந்த டான்ஸ் மூவ்மெண்ட்களை திரும்ப செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களாக அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. தமன்னாவின் அந்த பாடலுக்கான தன்னுடைய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இப்படி கடந்த ஒரு 10 நாட்களுக்கும் மேலாக வைரல் ஹிட்டாகியுள்ள காவாலா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள தமன்னா “காவாலா பாடலுக்கு கிடைக்கும் ஆதரவு நெகிழ்ச்சியாக உள்ளது. இது என் சினிமா பணிகளுக்கு கிடைத்துள்ள அங்கிகாரம். இது எவ்வளவு முக்கியமானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய இதயத்தில் இருந்து இதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.