வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (08:11 IST)

தலையணை சேலஞ்சை ஏற்ற தமன்னா: வைரலாகும் புகைப்படம்

கடந்த சில நாட்களாக நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் இடையே ‘தலையணை சேலஞ்ச்’ வைரலாகி வருகிறது. பலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தலையணையை மட்டுமே உடையாக கொண்டு புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்,
 
இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய தமன்னா, இந்த தலையணை சேலஞ்சை ஏற்று தனது சமூக வலைத்தளத்தில் வெறும் தலையணை மட்டுமே அணிந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாலிவுட் நடிகை பயல்ராஜ்புத் இந்தியாவில் ஆரம்பித்து வைத்த இந்த தலையணை சேலஞ்ச் தற்போது கோலிவுட் நடிகைகளிடமும் பரவி வருகிறது. தமன்னாவை அடுத்து இன்னும் யார் யாரெல்லாம் இந்த தலையணை சேலஞ்சை எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்