சொந்தக் குரலில் பேசும் தமன்னா


Sasikala| Last Updated: புதன், 20 ஜனவரி 2016 (15:56 IST)
தமன்னா இதுவரை சொந்தக் குரலில் பேசியதில்லை. தமன்னா மட்டுமில்லை, நயன்தாரா, சமந்தா போன்றவர்களே சமீபத்தில்தான் சொந்தக்குரலில் பேசினர்.

 
 
நானும் ரவுடிதான் படத்துக்கு முன்புவரை நயன்தாராவுக்கு டப்பிங் குரல்தான். நானும் ரவுடிதான் படம்தான் அவர் சொந்தக்குரலில் பேசிய முதல் படம். சமந்தா, நீதானே என் பொன் வசந்தம், 10 எண்றதுக்குள்ள என்று சில படங்கள். தமன்னாவும் இவர்களுடன் இணைகிறார்.
 
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தில் தமன்னா மதுரை கிராமத்து பெண்ணாக சேலை கட்டி நடிக்கிறார். கதாபாத்திரம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் படத்துக்கு தமன்னாவையே டப்பிங் பேசும்படி கேட்டுக் கொண்டாராம் சீனு ராமசாமி. தமன்னாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
ஆக, தர்மதுரையில் தமன்னாவின் சொந்தக்குரலை ரசிகர்கள் கேட்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :