1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (10:01 IST)

நகை விற்க இணையதளம் தொடங்கிய தமன்னா

நடிகை தமன்னா சமீபத்தில், ஒயிட் அண்ட் கோல்ட் என்ற பெயரில் நகை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்நிறுவனத்தில் இந்தியாவின் பிரபல நகை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த நகைகள் விற்பனைக்கு கிடைக்கும். நடிகை தமன்னாவும் சில நகைகளை வடிவமைத்துள்ளார்.

தமன்னாவின் தந்தை சந்தோஷ் பாட்டியா நகை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவர். அதனால், சின்ன வயதிலேயே நகை வடிவமைப்பு செய்வதில் ஆர்வம் ஏற்பட்டதாக தமன்னா கூறினார்.
 
தனது நிறுவனத்தில் நகை வாங்குவதற்கு வசதியாக ஒயிட் அண்ட் கோல்ட் என்ற பெயரில் இணையதளம் ஒன்றை நேற்று தமன்னா தொடங்கினார். இந்த இணையதளத்தில் தமன்னாவின் நிறுவனம் வடிவமைத்த நகைகள் விற்பனைக்கு கிடைக்கும்.