1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (11:24 IST)

சூடான பிகினி படத்தை வெளியிட்ட டாப்ஸி தங்கை: சினிமாவுக்கு வர திட்டமா?

தனுஷ் நடித்த 'ஆடுகளம்', அஜித் நடித்த 'ஆரம்பம்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பிங்க் உள்பட பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை டாப்சி. 
 
இந்த நிலையில் டாப்சியின் சகோதரி ஷாகுன் என்பவர் திடீரென படுகவர்ச்சியான பிகினி உடையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இவர் சினிமாவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் ஷாகுன் தற்போது 'திருமண பிளானிங் நிறுவனம் ஒன்றை அவரது சகோதரியுடன் இணைந்து நடத்தி வருவதாகவும், எனவே அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் ஷாகுனுக்கு விதவிதமான புகைப்படங்கள் எடுப்பது ஹாபி என்றும், அந்த வகையில் எடுக்கப்பட்ட தன்னுடைய பிகினி புகைப்படத்தைத்தான் அவர் தற்போது வெளியிட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். ஷாகுனின் இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாலோயர்கள் எண்ணிக்கை  திடீரென அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.