திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (13:34 IST)

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் அறிவிப்பு!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் அறிவிப்பு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்று ஒரே ஒரு தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே இருந்தது. ஆனால் சமீபத்தில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என ஒரு புதிய தயாரிப்பாளர் சங்கம் தோன்றியது என்பதும் அந்த சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக இருந்து வழிநடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒரு புதிய சங்கத்தை சமீபத்தில் டி ராஜேந்தர் தோற்றுவித்தார். ஆனால் அதே நேரத்தில் அவர் விநியோகஸ்தர் சங்க தலைவராக இருந்த காரணத்தினால் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக டி ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது