திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 மே 2022 (08:42 IST)

மீண்டும் இணையும் ஜெய்பீம் கூட்டணி… சர்ப்ரைஸாக அறிவித்த இயக்குனர்!

இயக்குனர் ஞானவேல் ஜெய்பீம் திரைப்படம் மூலமாக சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்தது. இந்த படம் அமேசான் ஓடிடியில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது. இந்த படத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் பல இடங்களில் இருளர் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில் பெரும் வெற்றி பெற்ற இந்த படத்துக்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஞானவேல் இதை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.