புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:15 IST)

சைரா நரசிம்மரெட்டி வசூல் அளவில் வெற்றியா?

அக்டோபர் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மரெட்டி’ படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தபோதிலும், இந்த படத்தின் பட்ஜெட்டை முந்தும் அளவுக்கு வசூல் இருக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

தெலுங்கு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. சரித்திர நிகழ்வுகளில் கற்பனையும் கலந்துள்ளது, ஒரு தெலுங்கர் தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டதை தொடங்கி வைத்தது போன்ற கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நரசிம்மரெட்டிக்கு முன்னரே நம்மூரில் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியுள்ளதால் தமிழத்தில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. மேலும் படத்தின் நீளமும் பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது

மேலும் சிரஞ்சீவி தவிர மற்ற முக்கிய கேரக்டர்கள் அனைத்துமே சிறப்பு தோற்றத்தில் வருவது போல் இருப்பதால் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜய்சேதுபதியின் காட்சிகள் வெகு குறைவாக உள்ளது

தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் நல்ல வசூலை பெற்றுவந்தாலும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி என்பதால் போட்ட முதலீடு திரும்பி வருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது