புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 1 மே 2021 (16:15 IST)

வயித்துல புள்ளைய சுமந்திட்டு இப்படி பண்ணலாமா? வைரலாகும் சாண்டி மனைவியின் வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
 
சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
 
அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். மீண்டும் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தி சாண்டி அழகு பார்த்தார். 
 
இந்நிலையில் International Dance Day முன்னிட்டு தற்போது 7 மாத கர்ப்பிணியாக மனைவி சில்வியா வயிற்றில் பிள்ளையை சுமந்துக்கொண்டு ‘முக்கால முக்காபுலா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நேரத்துல இப்படியா? பார்த்து பத்திரம் என அவருக்கு பலரும் செல்லமாக அட்வைஸ் செய்து வாழ்த்தியுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dorathy Sylvia ✌