திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (21:38 IST)

நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்த எஸ்.வி.சேகர்!!

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட டிரஸ்டி பதவியை பெற்றவர் எஸ்.வி.சேகர்.
 
தற்போது, இன்னும் இரு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் எஸ்.வி.சேகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு நடிகர் சங்க நிர்வாகம் மீது சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.  
 
எஸ்.வி.சேகர் கூறியதாவது, நடிகர் சங்கத்தில் கையெழுத்து போடுவதற்குதான் டிரஸ்டி பதவி என்ற நிலை உள்ளது. சங்கம் தொடர்பாக நான் கேட்ட சில கேள்விக்கு நிர்வாகம் முறையே பதில் தரவில்லை. 
 
மேலும், சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் எதிர் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் மனசாட்சிக்கு விரோதமாக நடிகர் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுக்கு என்னால் உடன்பட முடியவில்லை. 
 
இவை அனைத்தும் இருக்க மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்தது. இது போன்ற சில காரணங்களால் பதவியைவிட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.