திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (18:26 IST)

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ராஜினாமா செய்ய வேண்டும்: தினகரன் தரப்பு அதிரடி!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதனை வரவேற்று சமீபத்தில் பேசியுள்ளார்.
 
இந்நிலையில் ஆளுநர் ஆய்வு செய்வதில் என்ன தவறு இருக்கிறது என பேசிய மாஃபா பாண்டியராஜன் குறித்து தினகரன் ஆதரவு தங்க தமிழ்ச்செல்வனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தங்க தமிழ்ச்செல்வன் மாஃபா பாண்டியராஜன் ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.
 
அடிபணிந்து போவதற்கும், காலில் விழுவதற்கும் ஒரு எல்லை உள்ளது. பதவிக்காக யார் காலிலும் விழுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள். ஆய்வு செய்வது ஆளுநர் வேலையில்லை. இதனை சரி என்று பேசும் அமைச்சர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.
 
மேலும் இதனை சரி என்று சொல்லும் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகட்டும். ஆய்வு செய்வது மக்கள்  பிரதிநிதியான அமைச்சர்களின் வேலை. ஆய்வு செய்யாமல் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள். ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்றால் அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு போகட்டும் என்றார்.