புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (09:35 IST)

செல்போனில் சுஷாந்த் முகம்... திரும்பி வராத முதலாளிக்கு காத்திருக்கும் நாய் - வீடியோ!

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக குடிகொண்டிருக்கும் நட்சத்திர குடும்பங்களின் சாதி என கூறப்படுகிறது. பாலிவுட் திரையுலகம் திறமையானவர்களை விட ஸ்டார் நடிகர்களின் வாரிசுகளை ப்ரமோட் செய்வதிலேயே குறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முன்னணியில் இருப்பவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்த் இறந்து 5 நாள் ஆகியும் மீள துயரத்தில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சுஷாந்த் ஆசை ஆசையாக வளர்ந்த நாய் அவர் இல்லாமையால் மிகவும் சோகத்துடன் முதலாளியின் வருகைக்காக வீடு முழுக்க தேடிக்கொண்டிருக்கிறது. செல்போனில் சுஷாந்தின் முகத்தை பார்த்ததும் அந்த போனை கட்டிப்பிடித்துக்கொண்டு தடவுகிறது. அனைவரையும் கண்ணீரில் கலங்கடித்த அந்த வீடியோ இதோ..