புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (16:53 IST)

மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.. முதல்வருக்கு நன்றி! – சூர்யா மகிழ்ச்சி!

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படம் குறித்து முதல்வர் வாழ்த்தியதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்ததாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் படத்தில் இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் துயரங்களை துல்லியமாக காட்டியுள்ளதாகவும், அதில் பல காட்சிகள் மிசா காலத்தின் தான் சிறையில் இருந்தபோது நடந்தவற்றை நினைவுப்படுத்தியதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா “வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் படத்தை நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.