1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (19:38 IST)

துப்பாக்கி சூட்டின்போது உயிரிழந்த ரசிகை: அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான சூர்யாவின் ரசிகைக்கு சூர்யா தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து அவரது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது சூர்யாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா என்பவர் பலியானார் ஹைதராபாத் சேர்ந்த இந்த ரசிகையின் சென்னை வீட்டிற்கு நேரில் சென்று நடிகை சூர்யா அஞ்சலி செலுத்தினார்,.
 
மேலும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். அதில் ஐஸ்வர்யாவின் இழப்பை தாங்க முடியாமல் இருக்கும் உங்களுடைய துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்றும் தீவிர ரசிகையான அவர் இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஒரு சக மனிதனாக ஒரு தந்தையாக இந்த சோகத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva