திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:29 IST)

மாற்றத்துக்காக குடும்பத்துடன் துபாய்க்கு பறந்த சூர்யா!

நடிகர் சூர்யா தனது குடும்பத்தோடு துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளாராம்.

சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்திற்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் சூர்யாவை உதைக்கும் இளைஞருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார் என்பதும் அவரது அறிவிப்புக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டும் இன்னும் பிரச்சனை முடிந்த பாடில்லை.

இதனால் மன உளைச்சலில் இருக்கும் சூர்யா ஒரு மாற்றத்துக்காக குடும்பத்தோடு துபாய்க்கு சென்றுவிட்டாராம். சில நாட்கள் அங்கு தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியா திரும்ப உள்ளாராம்.