வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 ஜூன் 2024 (08:08 IST)

திராணி இல்லன்னா ஏன் படம் எடுக்குறீங்க?- கங்குவா ரிலீஸ் தேதி கேட்டு ஞானவேல் ராஜாவை திட்டி போஸ்டர் வைத்த சூர்யா ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. தீபாவளிக்காவது ரிலீஸாகுமா என்றால் அதுகுறித்தும் தெளிவான அப்டேட் இல்லை.

இந்நிலையில் கடுப்பான சூர்யா ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா மற்றும் தனஞ்செயன் ஆகியோரை விமர்சித்து திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை வைத்துள்ளனர். அந்த போஸ்டரில் “படத்தை எடுத்து சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய திராணி இருந்தால் மட்டும் படத்தைத் தயாரிங்க…. நீங்க தயாரிப்பு நிறுவனத்தை வச்சு என்ன வேணா பண்ணுங்க. எங்க அண்ணன விட்டுடுங்க” எனக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.