சூர்யா + ஹரி + டி இமான் – வருகிறது வில்லேஜ் ஆக்ஷன் செண்ட்டிமெண்ட் படம் !
சூர்யா நடித்து இயக்குனர் ஹரி இயக்கௌம் படத்துக்கு இசையமைக்க இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படமென்றால் 2013 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் 2 படம்தான். அதன் பின் 6 வருடங்களாக வெற்றி கிட்டாமல் போராடி வருகிறார். அதனால் எப்படியாவது ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காக தனது ஆஸ்தான இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்துள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்த ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் சிங்கம் 3 தோல்வியடைந்தது. இதையடுத்து இவர்கள் கிராமத்து ஆக்ஷன் செண்ட்டிமனெட் படமொன்றை தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த படத்துக்கு இசையமைக்க டி இமானை ஒப்பந்தம் செய்துள்ளனர். இமான் சூர்யா படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல்முறை.