1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (19:04 IST)

13 கெட்டப்களுடன் சூர்யா நடிக்கும் படம்: ஆச்சரிய தகவல்

Surya
முதல் முறையாக சூர்யா 13 கெட்டப்புகளில் நடிக்கும் படம் குறித்து ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளன.
 
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. 
 
இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் சூர்யா 13 கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
அதிகபட்சமாக கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்புகளில் நடித்த நிலையில் அதையும் தாண்டி சூர்யா 13 கெட்டப்புகளில் நடிக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva