திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (19:23 IST)

ஒரு கோடி ரூபாய் இன்னும் வரவில்லை: சர்வைவர் விஜயலட்சுமி விரக்தி

சர்வைவர் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற விஜயலட்சுமி இன்னும் ஒரு கோடி ரூபாய் தனக்கு உதவிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற விஜயலட்சுமிக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்துவிட்டதாக நெட்டிசன்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் 
 
ஆனால் தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் வரவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தம் ஆகும் போதே நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து தான் பணம் வரும் என்று கூறினார்கள் என்றும் ஆனால் அதற்குள் தனக்கு பணம் வந்து விட்டதாக பலரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தன்னை பற்றி நெகட்டிவாக சமூக வலைதளங்களில் எழுத ஒரு சிலர் காசு கொடுத்து உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.