வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (08:13 IST)

சூர்யாவுக்காக பாலிவுட்டில் கதை கேட்கும் ஜோதிகா.. விரைவில் பாலிவுட் அறிமுகம்!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் சிலரை சந்தித்து அவரின் மனைவி ஜோதிகா கதைகேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.