ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:43 IST)

தெலுங்கு ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றி கூறிய சூர்யா!

2008 ஆம் ஆண்டு சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடிப்பில் ரிலீஸான திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தை கௌதம் மேனன் தயாரிக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். அப்போது இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தெலுங்கிலும் சூர்யா S/O கிருஷ்ணா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த படம் தெலுங்கில் மீண்டும் ரி ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தை இப்போதும் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வீடியோவை பகிர்ந்த சூர்யா “ரசிகர்களின் இந்த அன்பு ஆச்சர்யப்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.