1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (15:26 IST)

சூர்யா- சிறுத்தை சிவா படத்தின் தயாரிப்பாளர் மாற்றமா?

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனால் சூர்யா இப்போது பாலாவின் புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அடுத்து வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில் சிறுத்தை சிவா படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருந்த இந்த படத்தை தற்போது தில் ராஜு தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Source valaipechu