1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 7 டிசம்பர் 2024 (08:14 IST)

மூன்றே வாரத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கங்குவா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா நடப்பில் உருவான  ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி புஸ்வானமாகியது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

கங்குவா படத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சமூகவலைதளங்கள் என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமாவில் தற்போது முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் என சொல்லப்படும் பொதுமக்களின் கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குகின்றன. அவை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்றன. அப்படி பாதிக்கப்பட்ட படமாக கங்குவா மாறியது.

இந்நிலையில் இந்த படம் நாளை முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. வழக்கமாக தமிழ் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 28 நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும். ஆனால் கங்குவா திரைப்படம் மூன்றே வாரத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.